சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீட்டை பார்த்துளீர்களா ? அதில் என்ன சிறப்பு.

0
1664
sivaji
- Advertisement -

நடிகர் சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4-வது மகனாக விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்திசின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன்.

- Advertisement -

சிவாஜி கணேசன் குறித்த தகவல்:

இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்றுதான் சொல்லணும். இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு:

இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை எனும் கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம் தான். அங்குதான் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே துறையில் பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

சிவாஜி கணேசனின் குடும்பம்:

மேலும், அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு கூட சென்று இருக்கார். அப்போது சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாள் தான் பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி இருந்தாராம். பிறகு சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திற்கு குடியேறியது. ஆனால், தஞ்சாவூர் சூரக்கோட்டையில் இருக்கும் அவரது பண்ணை வீடு இன்னும் இருக்கிறது. அதை ஆள் வைத்து பராமரித்து வருகிறார்கள். இந்த பண்ணையானது சுமார் 48 ஏக்கர் ஆகும். இந்தப் பண்ணையில் தஞ்சை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிலர் வேலை செய்கின்றனர். இந்த இடம் முழுவதும் தென்னந்தோப்புகள் இருக்கிறது.

பண்ணை வீடு குறித்த தகவல்:

இதனால் இவரது பண்ணையில் தேங்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த தோப்பில் இருந்து அறுக்கப்படும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக விற்கப்படுகிறது. பின்பு விற்கப்பட்டு கிடைக்கும் பணத்தை பிரபுவின் குடும்பத்திற்கு அனுப்பப்படுகிறது இந்த பண்ணையை பல ஆண்டுகளாக கணக்குப்பிள்ளை என்பவர் நிர்வகிக்கிறார். மேலும் அந்தப் பண்ணையின் ஓரத்தில் இருக்கும் ஒரு கூரை வீட்டில் தான் சிவாஜி குடும்பத்தினர் இருந்ததாகவும், பின்பு சிவாஜி சினிமாவிற்கு வந்த பிறகு வீட்டை சுற்றியுள்ள 48 ஏக்கர் இடத்தையும் வாங்கி அந்த இடத்தில் ஒரு பெரிய வீட்டையும் கட்டியதாகவும் கூறப்படுகிறது. மான் கொம்புகளும் மாட்டு வண்டிகளும் நிறைந்த அந்த வீடானது 60 ஆண்டுகள் பழமையான மிகவும் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

Advertisement