நர்ஸ்களுடன் சேர்ந்து தன் படத்தை பார்த்துள்ள கேப்டன் – அந்த படத்துல வர மாதிரி நடந்தா நல்லா இருக்குமே.

0
1598
vijayakanth
- Advertisement -

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில காலமாக இவர் உடல் நிலை தெரிவதாகவும் விரைவில் பழையபடி வருவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

-விளம்பரம்-

சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். உடல் நல குறைவால் கட்சி பணிகள், அரசியல் பொதுக்கூட்டங்கள் என்று எதிலும் தலையிடாமல் தான் இருந்து வருகிறார் விஜயகாந்த்.தற்போது தே மு தி கவின் கட்சி முடிவுகளை கூட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் அறிவித்து வருகிறார்.

- Advertisement -

கட்சியையும் அவர் தான் தற்போது கட்டி காத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இருப்பினும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் வெறும் கையை மட்டும் அசைத்துவிட்டு தான் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil director K Subaash passes away | The News Minute

இந்நிலையில், கொரோனா கட்டுப்படுகள் காரணமாக உடல் பரிசோதனை செய்ய அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். இப்படி ஒரு நிலையில் அமெரிக்காவில் இருந்தபடி ட்வீட் ஒன்றை போட்டுள்ள கேப்டன், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement