என்ன வீடியோ அனுப்ப சொல்லி பார்த்தீங்களே – மீண்டும் சீமான் குறித்து வீடியோ வெளியிட்ட விஜயலக்ஷ்மி.

0
1438
- Advertisement -

சீமான் பாஷையிலேயே நடிகை விஜயலட்சுமி கொடுத்திருக்கும் பதிலடி வீடியோ தான் தற்போது இணையத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை விஜயலட்சுமி குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

-விளம்பரம்-

பின் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜயலட்சுமி அளித்த புகார்:

ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். பின் சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. மேலும், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் துணை கமிஷனர் உரிமையாளர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.

போலீஸ் விசாரணை:

இதில் பல விவரங்களை போலீஸ் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து கடந்த வாரம் பழுத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக புகைப்படங்கள் ஆதாரங்களை எல்லாம் விஜயலட்சுமி நீதிபதியிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதை அடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை.

-விளம்பரம்-

விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ:

சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் தான் ஆஜராகி விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சீமானுக்கும், எனக்கும் இடையே என்ன நடந்தது என்று சீமானுக்கு தான் தெரியும். அவரை அறையில் பூட்டி வைத்து விட்டு இவர்கள் வக்காலத்துக்கு வருகிறார்கள். என்னுடைய பழைய வீடியோக்களை வெளியில் விட்டால் விஜயலட்சுமி பயந்து பொட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார் என்று கூறுகிறார்கள்.

சீமான் பாஷையில் பதிலடி:

உங்க அண்ணன் பாஷையிலேயே சொல்லணும்னா, ‘வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே கிடையாது’. ஆகஸ்ட் 28ஆம் தேதி எந்த பையரோடு கமிஷனர் ஆபீஸ்ல காலடி எடுத்து வெச்சேனோ அதே நம்பிக்கையில் தான் இன்றும் இருக்கிறேன். நான் என்னோட கடமையை பண்ணிட்டேன். காவல்துறை அவங்களோட கடமையைக் பண்ண காத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் குழப்பற வேலை வெச்சிக்காதீங்க. குழப்பம் இருந்தால் பேஸ்புக்கில் என்னுடைய ஐடி ஃபாலோ பண்ணுங்க. நான் உங்களுக்கும் டெய்லியும் அப்டேட் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement