சீமானுக்கு முன்பே விஜயலட்சுமி காதலித்த டிவி பிரபலம் – நிச்சயதார்த்தம் வரை சென்று முறிந்த உறவு. யார் தெரியுமா ?

0
1008
Vijayalakshmi
- Advertisement -

சீமானுக்கு முன்பே நடிகை விஜயலட்சுமி டேட்டிங் செய்திருக்கும் பிரபலம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

- Advertisement -

விஜயலக்ஷ்மி திரைப்பயணம்:

பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல்வேறு கருத்துக்களும் எழுந்தது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு முன்பே பிரபல நடிகரை டேட்டிங் செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

விஜயலட்சுமி டேட்டிங் செய்த நபர்:

அதாவது, நடிகை விஜயலட்சுமி அவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகரும், டிவி தொகுப்பாளரும் ஆக இருந்த சுஜன் லோகேஷ் என்பவரை காதலித்து இருந்தார். இருவருமே அப்போது டேட்டிங் செய்திருக்கிறார்கள். பின் இரு வீட்டிலும் பேசி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ள வில்லை. ஏதோ சில பிரச்சனைகளால் இருவருமே பிரிந்து விட்டனர். அதற்கு பிறகு தான் விஜயலட்சுமி சீமானை காதலித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விஜயலக்ஷ்மி கொடுத்த விளக்கம் :

சுஜன் லோகேஷ்ஷை விஜயலக்ஷ்மி பிரிந்த போது சுஜன் லோகேஷ்ஷின் ரசிகர்கள் பலரும் விஜயலக்ஷ்மி சுஜன் லோகேஷ்ஷின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக விஜயலக்ஷ்மியை விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி ‘நான் அவரை ஏமாற்றவில்லை அவருடைய வாழ்க்கையில் நான் விளையாட எண்ணியிருந்தால் என்னுடைய உறவை நிச்சயதார்தம் வரை எடுத்து சென்று இருக்க மாட்டேன்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement