மாஸா, கெத்தா, கேப்டனா, ஓஹோய் - விஜயகாந்த் மகனை பங்கமாக கலாய்த்த தோழிகள்.

By Rajkumar · 8/5/2021

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் 'சகாப்தம்'. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

https://www.youtube.com/watch?v=J-4kpNIBhok

இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார்.

இதையும் பாருங்க : பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் காலமானார் - புகைப்படத்தை பதிவிட்டு கார்த்தி உருக்கம்.

இதனைத் தொடர்ந்து 'மதுர வீரன்' என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகர் சண்முக பாண்டியன். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்தார். இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மீனாக்ஷி என்பவர் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பால சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

https://twitter.com/NandaVenkat92/status/1389987936792236033

விஜயகாந்தின் மற்றொரு மகனான விஜய பிரபாகரன் தற்போது தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்துக்கு பின்னர் இவர் தான் அந்த கட்சியை வழி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போது இவர் மேடையில் பேசிய 'மாஸா, கெத்தா, கேப்டனா, ஓஹோய்' என்ற வீடியோ படு வைரலானது. இப்படி ஒரு நிலையில் அந்த வசனத்தை விஜயபரபாகரனின் தோழிகள் கலாய்த்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full