தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் புகழ் கோமகன் ஆகியோர் காலமாகி இருந்தார்கள்
இப்படி ஒரு நிலையில் பருத்தி வீரன் படத்தில் நடித்த பாட்டி தற்போது காலமாகியுள்ளார். அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் நடித்த பிரியா மணிக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதும் கிடைத்து இருந்தது.
இதையும் பாருங்க : தமிழ் கடவுள் முருகன், கண்மணி சீரியல் நடிகை பிரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா.
இந்த படத்தில் சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் என்று பலர் நடித்து இருந்தார்கள். அதே போல இந்த படத்தில் கார்த்தியின் பாட்டியாக ‘மங்காயி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பஞ்சவர்ணம். பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில காலமாக இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் இவர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் பஞ்சவர்ணம் பாட்டியின் இரங்கல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி, பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.