வெளியான பீஸ்ட் படத்தின் முதல் பாடல் ‘அரபிக் குத்து’ – அந்த பாட்டு மாதிரியா இருக்கு. கேட்டு சொல்லுங்க.

0
1183
- Advertisement -

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘ஆரபிக் குத்து’ பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் நடிப்பில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

- Advertisement -

நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணி:

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் ஏற்கனவே குறித்த ப்ரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி இருந்தது. நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் சிவர்கார்த்திகேயன் செல்லமா’ பாடலும் ‘ஓ பேபி’ பாடலும் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பாடலுக்கு அரபிக் குத்து என்று பெயரிடப்பட்டு உள்ளது.

This image has an empty alt attribute; its file name is arabic-768x1024.jpg

அரபி குத்து பாடலின் போஸ்டர்:

மேலும், இந்த அரபிக் குத்து பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது காதலர் தினமான இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.. இதற்கு முன்பே இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சிறிய கிலிம்ப்ஸை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த அரபி குத்து தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

-விளம்பரம்-

ரீ-மேக் சர்ச்சையில் சிக்கிய பாடல் :

பொதுவாக அனிருத் பாடல்கள் வெளியாகினாலே அது வேறு பாடலின் சாயல் இருக்கும் என்ற ஒரு சர்ச்சையும் கிளம்பிவிடும். அந்த வகையில் இந்த பாடலின் ப்ரோமோ வெளியான போதே அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியது. இந்த பாடல் ரவுடி பேபி பாடலில் வரும் முதல் மெட்டை போல இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தது. அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் கூட அனிருத் இதே மெட்டை தான் போட்டுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.

அனிருத் ரீமேக் பாடல்:

பொதுவாகவே அனிருத் அவர்கள் தன்னுடைய பாடல்களை ரீமேக் செய்து வெளியிடுவதில் கைதேர்ந்தவர். அதே போல் சமீப காலமாக நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார். இதற்கு சிலர் விமர்சித்து வந்தாலும் அந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிரூத் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகுதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement