பூக்கள் நிறைத்த நீச்சல் குளத்தில் குளு குளு புகைப்படத்தை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.

By Rajkumar · 25/10/2021

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக தளபதி விஜய் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்குகளில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். ஏன்னா, அந்த அளவிற்கு அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் 'பீஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது தளபதி விஜய்யின் 65வது படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர். பீஸ்ட் படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : அஸிஸ்டன்டுக்கு 50 லட்சம், மும்பை மேக்கப் மேன், பங்ஷனுக்கு வார 15 லட்சம் - அஜித் முதல் நயன் வரை நாறடித்த தயாரிப்பாளர்.

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. மேலும், இந்த படத்திற்கு பூஜை போட்ட அன்றே பூஜையிலும் அபர்ணா தாஸ் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.பீஸ்ட் படத்தில் அபர்ணா அவர்கள் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம்.

இப்படி ஒரு நிலையில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை அபர்ணா தாஸ் அவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஞானப்பிரகாசன் மற்றும் வினித் சீனிவாசனுடன் மனோகரம் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால், பீஸ்ட் திரைப்படத்தின் மூலமே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full