தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளை பயங்கரமாக கழுவி ஊற்றிய பிரபல தயாரிப்பாளர். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிகப்பிரபலமான தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் கே ராஜன்.
இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்கள் கொண்டவர்.
மேலும், இவர் எப்போதும் திரை உலகை விமர்சிப்பதும், நடிகர் நடிகைகளை குறித்து கடுமையாக பேசுவதும் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார்.
https://www.youtube.com/watch?v=U94R_pypyWE
அந்த வகையில் இயக்குனர் ராஜ ராஜ துரை இயக்கத்தில் உசேன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'முதல் மனிதன்'. இந்த படத்தில் நரேன், கௌசல்யா, மாரிமுத்து உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கே ராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். அதில் கே ராஜன் அவர்கள் பேசியது, மன தைரியத்துடன், துணிச்சலுடன் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் உசேனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் பாருங்க : மண்டப ஓனருடன் காதல் - கோலாகலமாக திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் நடிகை.
இயக்குனர் ராஜராஜ துரை அருமையான பாடல்களை தந்துள்ளார். இந்த படத்தினுடைய ஒளிப்பதிவு மிக அழகாக இருக்கிறது. இது ஒரு நல்ல படமாக இல்லாமல் மக்களுக்கு நல்ல பாடமாக அமைய அமையும். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். அதோடு இந்த காலத்தில் இருக்கும் நடிகைகளை வைத்து படம் எடுப்பதற்குள் தயாரிப்பாளர்கள் மண்டை காய்ந்து விடுகிறது. நவீன கால சினிமா துறையில் நடிக்கும் நடிகைகள் ஒரு படத்தை நடிக்க ஒப்பந்தமான பிறகு அவர்கள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லாமல் செல்கிறது. ஏனென்றால், நயன்தாரா சூட்டிங்க் வந்தால் அவருக்கு ஏழு உதவியாளர்கள், 12 கேரவன் வரை கேட்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் என்றால் கூட 14 லட்சம் ரூபாய் வரை அவர்களுக்கு செலவாகிறது. இதைவிட ஆண்ட்ரியா கேட்கும் டிமாண்ட் பலரையும் பதறவைக்கும். ஏன்னா, அவருக்கு மேக்கப்மேன் உள்ளூரில் இருந்து எல்லாம் வேண்டாமாம். மும்பையில் இருந்து தான் வர வைக்க வேண்டும் என்று கேட்கிறார். இவர்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு திரிஷா இருக்கிறார். இவர் திரைப்பட விழாவிற்கு வருவதற்கே 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கேட்கிறாராம். இப்படி தமிழ் சினிமாவில் காஸ்ட்லியான கதாநாயகிகளை வைத்து படம் எடுப்பது இந்த காலத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கு என்று புலம்பியுள்ளார்.

அதே போல அஜித்தை முதல் படத்தில் நடிக்க வைக்க அந்த இயக்குனர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார். ஆனால், தற்போது வெற்றி பெற்ற பிறகு ஆடியோ பங்ஷனுக்கு வர மாட்டேன் என்று யார் சொன்னாலும் அது திமிரின் வெளிப்பாடு அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். கடந்த சில நாடளுக்கு முன் பேசிய ராஜன், அஜித்தை அறிமுகம் செய்த சோழா பொன்னுரங்கம், இப்போது கஷ்டத்தில் இருக்கிறார். ஆனால், இவரோ போனி கபூருக்கு இரண்டு படங்களை நடித்து கொடுக்கிறார். பாவம் போனி கபூருக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை போல





