Meaner….Leaner…Stronger – வெளியானது பீஸ்ட் படத்தின் வெறித்தனமான மூன்றாவது பாடல். இதோ வீடியோ.

0
623
Beast
- Advertisement -

பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

பெரும் வரவேற்பபு பெற்ற அரபிக் குத்து :

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் இல்லாமல் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் :

மேலும், இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியான போதே இந்த மியூசிக் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. நிச்சயம் இந்த பாடல் விஜய் ரசிகர்களின் ரிங் டோனாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

-விளம்பரம்-

விற்று தீர்ந்த முன்பதிவு டிக்கெட்டுகள் :

விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே பல நகரங்களில் துவங்கிவிட்டது. புக்கிங் துவங்கிய சில மணி நேரத்திலேயே இந்த படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவாகிவிட்டது.

850 திரையரங்குகளில் வெளியாகும் பீஸ்ட் :

இதனால் ரசிகர்கள் பலர் இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க ஆயிரகணக்கில் செலவு செய்து பிளாக்கில் தான் வாங்கி வருகின்றனர். பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே பிரம்மாண்ட படமான Kgf2 வும் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் 800 முதல் 850 திரையரங்குகளிலும் Kgf2 திரைப்படம் 200 முதல் 250 திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement