தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய். மேலும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான “பிகில்” படம் கோலாகலமாக பண்டிகை போன்று கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், பிகில் படம் திரையரங்களில் மாஸ் காட்டியது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் பிகில் படம் தொடர்பாக தெலுங்கு இயக்குனர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் பிகில் படத்தை டிஜிட்டலில் வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது என தகவல் வெளியானது. இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பிகில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே திரையுலகிற்கு வரும் வரை பல பிரச்சனைகலிலும், சிக்கலில் மாட்டி வந்தது. தற்போது வெளிவந்த பிறகும் பயங்கர பிரச்சனைகள் இருந்து வருகின்றது என்றும் பிகிலுக்கு இன்னும் எவ்வளவு பிரச்சனைகள் தான் வரப் போகிறதோ? என்றும் விஜய் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் பிகில் படம் 300 கோடிக்கு மேல் வசூ ஆனது என்றும் கூறி வருகிறார்கள். அதோடு தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்- அட்லீயும் மூன்றாவது முறையாக இந்த பிகில் படத்தில் இணைகிறார்கள். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இவர்களுடன் ஜாக்கி செரீப், யோகி பாபு, கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, சௌந்தர்ராஜா, தேவதர்ஷினி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை ஆகும். இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸான விஜயின் பிகில் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியானது.

இதையும் பாருங்க : தளபதியை லிப் லாப் அடிக்காமல் விட மாட்டேன். அடம் பிடிக்கும் இருட்டு நடிகை.

மேலும், இந்த படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் செல்வா அவர்கள் வழக்கு தொடர்ந்தார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் இயக்குனர் அட்லி மீது ஹைதராபாத் கச்சிபவுலி போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான அகிலேஷ் வாலின் கதையை சினிமாவாக எடுக்க நான் முடிவு செய்திருந்தேன். இதற்காக அவளை சந்தித்து நான் ஒப்பந்தமும் போட்டு உள்ளேன். இந்நிலையில் இயக்குனர் அட்லீ அவர்கள் அவர்கள் விஜய்யை வைத்து நான் எடுக்க நினைத்த கதையை எடுத்து உள்ளார். அதை பிகில் படத்தின் டிரைலரை பார்த்த போது நான் பேர் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

Advertisement

Advertisement

அதுமட்டுமில்லாமல் அகிலேஷ் பாலின் கதையையும் பிகில் கதையும் ஒன்று போல் இருந்தது. இதையடுத்து நடிகர் விஜய்,அட்லீயிடம் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், முடியவில்லை. நான் எழுதியிருந்த கதையை படம் எடுத்த அவர்கள் மீது காப்பி ரைட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் சேட்டிலைட், டிஜிட்டலில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும், விசாரித்த நீதிமன்றம் பிகில், அதன் தெலுங்கு பதிப்பான விசில் படங்களை டிஜிட்டல், யுடியூப் தளங்களில் வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் அமேசான் ப்ரைம் டைமில் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. இந்த தடை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement