விஜய்க்கு நெருக்கமான நபர் திடீர் மரணம் – இவர் யார் தெரியுமா ? பல பிரபலங்கள் இரங்கல்.

0
1596
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உச்சத்தில் இருக்கும் நடிகர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். தளபதியின் படம் என்றாலே அலைகடல் போல் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தளபதி விஜய்யின் படக்குழுவினரில் முக்கியமான நபரான, விஜய்யின் பாதுகாவலரான தாஸ் சேட்டன் தற்போது மரணமடைந்துள்ளார். இவரை அனைவரும் சேட்டன் என்று பாசத்துடன் அழைப்பார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

RIP Dasetta?

A post shared by JOJU (@joju_george) on

இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை. இவர் நடிக விஜய் மட்டும் இல்லாமல் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்ணுக்கும் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தாஸ் சேட்டன் இறந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இவரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் அவர்கள் கூறி இருப்பது,

- Advertisement -

உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். உங்கள் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். மேலும், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜ் அவர்கள் “RIP Das etta” என்று கூறியுள்ளார். இப்படி பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் டீவ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement