விஜய் “Fitness” காரணம் இதுதான்..! ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி சிந்து.!

0
859

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருக்கும் விஜய் இந்த வயதிலும் பல இளைஞர்கள் ஆச்சர்யபடும்படி தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார். அவருடைய உடல் அமைப்பை கண்டு இதுவரை ஆச்சர்யபடாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.

vijay actor

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் “செக்க செவந்த வானம்” படத்தில் பிரகாஷ் ராஜின் மகளாக நடித்துள்ள ஆர் ஜெ சிந்து விஜய்யின் பிட்னஸ் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல ரேடியோ சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்த ஆர் ஜெ சிந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “கிங்ஸ் ஆப் காமெடி” நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சியமனர். பின்னர் “mrs.சின்னத்திரை ” நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் பங்குபெற்றிருந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் ஜெ சிந்துவிடம், ஒருவேலை நீங்கள் ஆர் ஜெ வாக நடிகர்களை நேர்காணல் செய்தால் விஜய்யிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள சிந்து, அவர்(விஜய்) எப்படி இன்னமும் பிட்டாகவும், எனர்ஜியாகவும், இளமையாகவும் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் அதிகம் யோகா செய்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

RJ Sindhu

எனவே, அவரை(விஜய்) நான் நேரில் கண்டால், சார் நீங்கள் நிறைய யோகா செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள், ஆமாம் என்று சொன்னனால் நான் நாளைக்கே யோகா வகுப்பிற்கு சேர்ந்து விடுவேன் சார் என்று கூறிவிடுவேன்.

Advertisement