அட, குருவி படத்தில் வந்த பையனா இது ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க – அரபிக் குத்து பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம்.

0
1001
arabic
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார்.

- Advertisement -

விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். நெல்சன் மகன், சமந்தா என பலரும் அரபி குத்து பாடலுக்கு செம குத்து போட்டிருக்கிறார்கள்.

விஜய் போலவே நடனமாடிய இர்பான்:

அந்தவகையில் தற்போது இர்பான் என்பவர் அரபி குத்துப்பாடலுக்கு விஜய் போலவே நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. விஜய் போல் நடனமாடிய இர்பான் வேற யாரும் இல்லைங்க, தளபதி விஜயுடன் குருவி படத்தில் நடித்தவர். இயக்குனர் தரணி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் குருவி. இந்த படத்தில் விஜய், திரிஷா, சுமன், விவேக், மணிவண்னன், மாளவிகா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

குருவி படத்தில் நடித்த சின்ன பையன்:

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் திரிஷாவிற்கு பிடிக்காத மாப்பிளையுடன் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்போது திரிஷா தன் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை கழட்ட ஒரு சின்ன பையன் இடம் உதவி கேட்பார். அந்த பையனும் உதவி செய்வார். அந்த சிறுவர் வேடத்தில் நடித்தவர் தான் இருப்பான். தற்போது இவர் வளர்ந்து விஜயின் அரபி குத்துப்பாடலுக்கு பயங்கரமாக நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முகெனின் நெருங்கிய நண்பர் இர்பான்:

இதை பார்த்து பலரும் குருவி படத்தில் நடித்த சின்ன பையனா! எப்படி இருக்காரு! என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 3 யின் வெற்றியாளர் முகேனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க தமிழ் சினிமா பிரபலங்களுடன் இவர் எடுத்த புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது. விரைவில் இவரை அடுத்த பிக் பாஸ் சீசனில் பார்த்தாலும் பார்க்கலாம்.

Advertisement