பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி, கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், ,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஒரு குட்டி கத என்ற தலைப்பில் வெளியான இந்த பாடலை விஜய் பாடி இருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : சித்தி 2 நாயகனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கில்ல. எல்லாம் இந்த சர்ச்சை ஷார்ட் பிலிம்ல நடிச்சவர் தான்.

பொதுவாக நம்ம விஜய் அவர்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அதே வரிகளில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், இந்த குட்டி கதை பாடல் தான் `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

பிகில் படத்தின் வெறித்தனம் பாடலின் சாதனையையும் முறி அடித்தது. வெளியான 16 மணி நேரத்தில் வெறித்தனம் பாடல் 4 மில்லியன்களை கடந்த நிலையில், குட்டி ஸ்டோரி பாடல் 6.2 மில்லியனை கடந்து சாதித்துள்ளது.மேலும், தற்போது வரை இந்த பாடல் 12மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கோலிவுட் சாதனைகள் மொத்தம் விஜய்யின் காலுக்கு கீழ் அதாவது KWRecordsUnderVIJAYfeet என்ற ஹேஸ் டேகும் #அன்புள்ளகில்லி என்ற ஹேஸ் டேகும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement