சித்தி 2 நாயகனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கில்ல. எல்லாம் இந்த சர்ச்சை ஷார்ட் பிலிம்ல நடிச்சவர் தான்.

0
38909
Chithi-2
- Advertisement -

சினிமாவில் நடித்த நடிகர் நடிகைகளை விட குறும்படங்கள் நடத்த பல்வேறு நடிகர் நடிகைகள் சமூகவலைதளத்தில் விரைவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தில் நடித்து ஒரே நாளில் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர். குறும்பட இயக்குனர் சர்ஜூன் என்பவர் இயக்கிய லட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த குறும்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனால், அணைத்து எதிர்ப்பையும் மீறி இந்த குறும்படம் மிகவும் வைரலானது.

-விளம்பரம்-
நந்தன் லோகநாதன்

- Advertisement -

இந்த குறும்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. அவருக்கு நிகராக இந்த படத்தில் நாயகனாக நடித்த நந்தன் லோகநாதன் என்பவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த குறும் படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த குறும்படத்திலோ, தொடரிலோ காண முடியவில்லை. இந்த நிலையில்  இடைவெளிக்குப் பிறகு தற்போது `சித்தி 2′ சீரியலில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.

இதையும் பாருங்க : பாப் கட், பருமனான உடல். அடையாளம் தெரியாமல் மாறியுள்ள விசு பட நடிகை.

சன் தொலைக்காட்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி. தற்போது இந்த தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பிரபல பத்திரிகை ஒன்றிற்க்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், சில மாதங்களுக்கு முன்னால் எனக்கு ரேடான் மீடியாவில் இருந்து போன் வந்தது.

-விளம்பரம்-
Image result for lakshmi short film

ராதிகா மேடம் நடிக்கிற சீரியலில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். அதற்கு அடுத்த வாரம் ஆபீஸ் போனபோது ராதிகா மேடம் வந்திருந்தார்கள். நான் உங்களுடைய லட்சுமி சீரியல்ல பார்த்தேன், நல்லா நடிச்சிருந்தீங்க. அதை பார்த்து தான் இந்த சீரியல்ல உங்களை நடிக்க செலக்ட் பண்ணும் என்று சொன்னார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. லக்ஷ்மி வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதில் நடித்த என்னை ஞாபகம் வைத்து கூப்பிட்டது மிகவும் பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.

Advertisement