ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாநகரம், கைதி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேபோல கைதி படத்தில் தனது குரலால் அசத்திய அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா, மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்த நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.

Advertisement

அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர். இதனால் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியகாது என்று படக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.இருப்பினும் நவம்பர் 14 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் வெறும் 120 நிமிடத்தில் 7.5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த டீஸர் வெளியான 3 மணி நேரத்தில் 10 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைவான நேரத்தில் 10மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட யூடுயூப் டீசர் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் மாஸ்டர் டீஸர் என்னென்ன சாதனைகளை படைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Advertisement