வில்லு படத்தின் பாடலில் வந்த அதே டுயூனை வீரம் படத்தில் ஆல்டர் செய்து சொருகியுள்ள இசையமைப்பாளர்.

0
4001
dsp
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். ஆரம்பத்தில் இவரது பல்வேறு படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களும் பாடல்களும் இவர்களுது படங்களில் இருந்தன. ஆனால் இவர்கள் இருவர் படத்திலும் ஒரே விதமான டுயூனை பயன்படுத்திய பெருமை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தை தான் சாரும்.

-விளம்பரம்-
Anil Ravipudi and Devi Sri Prasad's Tiff To Push Movie Release?

- Advertisement -

தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானது விஜய் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இவர் பின்னணி இசையமைப்பாளராக மட்டும் பணியாற்றி இருந்தார். மேலும், இவர் ஒரு முறையான இசையப்பாளராக அறிமுகமானது இனிது இனிது காதல் இனிது என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் இசையமைத்துவிட்டார்.

விஜய்யை பொறுத்த வரை திருப்பாச்சி, சச்சின், வில்லு, புலி போன்ற படங்களுக்கு டிஎஸ் பி இசையமைத்துள்ளார். அதே போல அஜித்துக்கு ”வீரம்” படத்திற்கு மட்டும் தான் இசையமைத்திருக்கிறார் டிஎஸ் ப. இந்த நிலையில் விஜய் படத்தின் பாடலில் பயன்படுத்திய அதே டுயூனை அஜித் மற்றும் சூர்யா படத்திற்கும் பயன்படுத்தியுள்ளார் டிஎஸ் பி.

-விளம்பரம்-

விஜய், சூர்யா ,அஜீத் யை வெச்சு செய்த DSP! தரமான சம்பவம் ?

Madurai Pasanga ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಮೇ 9, 2020

2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வில்லு’ படத்தில் இடம்பெற்ற ‘ராமா ராமா’ பாடலின் நடுவே வரும் அதே டுயூனை அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்திலும் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 2’ படத்திலும் கொஞ்சம் ஆல்டர் செய்து சொருகியுள்ளார் டிஎஸ் பி. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement