விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் மகன் – வெளியான புகைப்படம். வேற லெவல் Transformationல இருக்காரே.

0
338
Vijaysethupathy
- Advertisement -

விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இருந்து விஜய் சேதுபதி மகன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. கோலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை குறித்து திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து அரசியல் தலைவர்கள் ஆன திருமாவளவன் எம்.பி, சீமான் ஆகியோர் பாராட்டி இருந்தார்கள்.

பாராட்டிய ரஜினி :

சமீபத்தில் தான் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடந்து இருந்தது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டு தங்களுடைய பட அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் விடுதலை படம் குறித்து ரஜினிகாந்த் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் விடுதலை 1 படத்தை பார்த்தேன். விடுதலை- இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திடாத கதைகளம். இது ஒரு திரைக்காவியம்.

-விளம்பரம்-

விடுதலை படம் குறித்து சொன்னது:

சூரியின் நடிப்பு பிரம்மிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரை உலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்காக அவருடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் ஆகியோரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார்.

இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி மகன் :

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அவருடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல முதல் பாகத்தில் விஜய் சேதுபதி குறித்த எந்த ஒரு பின்னணியும் காட்டப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மகன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாக இருக்கிறது. மேலும், விடுதலைப் பாகத்தில் இரண்டாம் பாகத்தில் இவர் சிறு வயது விஜய் சேதுபதியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement