லோகேஷ் சொன்ன மாதிரி அட்லீ சொல்லி இருந்தா என்ன ஆவரது – ப்ளூ சட்டையின் விக்ரம் விமர்சனம்.

0
468
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட படத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

ப்ளூ சட்டையும் உருவக் கேலியும் :

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் நடுத்தர ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை. மேலும், இந்த படம் வெளியானதை பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது.

திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் :

அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல் அஜித்தை தொடர்ந்து உருவக் கேலி செய்து வந்தார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அஜித் மற்றும் வலிமை படத்தை கேலி செய்தே வந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார் ப்ளூ சட்டை.

-விளம்பரம்-

நல்ல வரவேற்பை பெரும் விக்ரம் :

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

விக்ரம் ப்ளூ சட்டை விமர்சனம் :

மேலும், படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை, இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதிதான கதை இல்லை, படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், இருப்பினும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement