விக்ரம் படத்தில் டிரெண்டாகும் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’- எந்தப் படம் தெரியுமா ? இவருக்காதான் கைதி பட கதையே எழுதினார் லோகேஷ்.

0
1704
- Advertisement -

விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு இந்த பாடல் எந்த படம்? யாருடைய பாடல்? என்று ரசிகர்கள் தேடி கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார்.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

படத்தின் வசூல்:

அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதிலும் கமல் பாடிய பத்தல பத்தல பாடல் அரசியல் சார்ந்தது. இதற்கு சில எதிர்ப்புகள் இருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு கமலின் வேற லெவல் குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. அதற்கு பிறகு அனிருத் பாடிய போர் கொண்ட சிங்கம் பாடல் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் பாடல்கள்:

இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் பாடல்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மாநகரம், கைதி படங்களில் பின்னணி இசை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் கைதி, விக்ரம் படத்திலும் முக்கியமான கட்டத்தில் இரண்டு பழைய பாடல்கள் ஒலிக்கும். கைதி படத்தில் காவல் நிலையத்தை சுற்றி வளைத்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ஜும்பலக்கா ஜும்பலக்கா, ஆசை அதிகம் வச்சு என்ற பாடல் ஒலிக்கும்.

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல்:

இதை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தில் ஆரம்பத்தில் கமலின் காரில் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற ஒலிக்கிறது. படம் பார்த்தவர்கள் இது என்ன பாடல்? எந்த படம் என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த பாடல் அருண்பாண்டியன் நடிப்பில் 1995 இல் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் பாடல்தான் அது. இதில் மன்சூர் அலிகானும் ஆடி இருப்பார். உண்மையில் கைதி திரைப்படம் முதலில் அவருக்கு தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் கார்த்தியை கமிட் செய்தார் லோகேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement