கமலின் விக்ரம் படத்துக்கு முன்னே விஜய் படத்தில் பயன்படுத்திய டெக்னாலஜி – என்ன தெரியுமா?

0
619
vikram
- Advertisement -

கமலின் விக்ரம் படத்திற்கு முன்பே விஜய் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த விக்ரம் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்ததால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருந்தார்கள்.

- Advertisement -

விக்ரம் படம் :

மேலும், விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு விக்ரம் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமலின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார் கமல். இந்த படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

Mocobot கேமரா குறித்து லோகேஷ் சொன்னது:

இந்த நிலையில் இந்த படத்தின் இடைவேளை காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா தான். Mocobot கேமராவை குறித்து பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது, இந்த கேமராவை பயன்படுத்துவதற்கு பொறுமை ரொம்ப தேவை. 10 செகண்ட் சூட்டை பண்ணுவதற்கு 2 மணிநேரம் ப்ரோகிராம் பண்ணனும். அதற்கு ஆர்ட்டிஸ்டுகள் ஒத்துழைப்பும் ரொம்ப முக்கியம். கேமராவில் டக்கு டக்குனு எல்லாமே ரெக்கார்ட் ஆகிக்கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

பீஸ்ட் படம்:

கொஞ்சம் சின்னதாக தப்பு நடந்தால் கூட கண்ட்ரோல் இல்லாம போகிவிடும். இடைவேளை காட்சி பிரமாதமாக இருப்பதற்கு காரணம் Mocobot கேமரா தான் என்று கூறியிருந்தார். ஆனால், Mocobot கேமரா கமலின் விக்ரம் படத்திற்கு முன்பே விஜயின் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

பீஸ்ட் படத்தில் Mocobot கேமரா:

இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் Mocobot கேமராவை பயன்படுத்தி இருக்கின்றனர்.
அந்த சூட்டிங்க் ஸ்பார்ட் வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் அந்தக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பேசவில்லை. ஆனால், விக்ரம் படத்தில் Mocobot கேமரா பயன்படுத்திய காட்சி சூப்பராக வந்தது தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டதற்கு காரணம்
என்று கூறப்படுகிறது.

Advertisement