படக்குழு மீது அதிருப்தியில் இருக்கிறாரா விக்ரம் ? அதனால் தான் ஆடியோ லாஞ்சுக்கு வரலையா ? ரசிகர்களை சமாதானம் செய்ய Lyca வெளியிட்ட அறிவிப்பு.

By Siva · 13/7/2022

பட்டத்து இளவரசரை தவற விட்டீர்களா? என்ற பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

இது இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட வருட கனவுப்படம். அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இதையும் பாருங்க : 96 நிமிட ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் எப்படி ? - விமர்சனம் இதோ.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

படத்தின் நடிகர்கள் கதாபாத்திரம்:

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், படத்தில் சுந்தரசோழன் – சரத்குமார், ஆதித்த கரிகாலன்- விக்ரம், வந்தியதேவன் – கார்த்திக், நந்தினி- ஐஸ்வர்யா ராய், குந்தவை- திரிஷா, அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்கள்.

டீசர் வெளியீட்டு விழா:

அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மேலும், ரசிகர்களை பிரமிக்க வைத்த டீசர் இந்தியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், விழாவில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பட குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசரை தவற விட்டீர்களா? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் உள்ளது.

விழாவிற்கு விக்ரம் வராத காரணம்:

இது நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று லைகா புரொடக்ஷன் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் படத்தில் வரும் நேரம் குறைவு என்பதன் காரணமாக மணி ரத்னத்தின் மீது அதிருப்தியில் உள்ளாராம் விக்ரம். இதனால், தான் அவர் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையமான தகவல் என்று தெரியவில்லை. இந்த செய்தியை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full