96 நிமிட ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் எப்படி ? – விமர்சனம் இதோ.

0
970
iravinnizhal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது படத்தின் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

கதைக்களம்:

படத்தில் நந்து என்பவர் சினிமா பைனான்சியர். இவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள போலி சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாடுகிறார். அங்கே என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது ? எல்லாம் முடிந்து மீதமிருக்கும் எதிரிகளை முடித்து தள்ள முடிவு எடுக்கும் தருணத்தில் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறார்.

நந்துவின் வாழ்வில் நந்துவாக பலர் வந்து போகிறார்கள். மேலும், நந்து இந்தச் சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக, இந்தச் சமூகத்தைப் பாதித்த ஒரு நபராக என்னவெல்லாம் செய்கிறார். நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள் செய்யும் நல்லது, கெட்டது. கடைசியில் நந்துக்கு என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை. நந்து என்ற ரோலில் பார்த்திபன், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா என்று நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதையும் பாருங்க : 96 நிமிட ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் எப்படி ? – விமர்சனம் இதோ.

நந்துவின் மனங்கவர் நாயகிகளாக சிநேகா குமாரி, பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத் என மூவர் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் என பிற நடிகர்களும் வருகிறார்கள். ஒரு முழுநீள சினிமாவை பிழையின்றி எடுப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. ஒரு மனிதன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் போது அவன் கண் முன் அவன் மொத்த வாழ்க்கையும் ரீவைண்டாக அதுவும் முன்னுக்குப்பின் மாறி மாறி நேரில் வந்தால் எப்படி இருக்கும் என யோசித்து ஒரு கதையை தந்திருக்கிறார் பார்த்திபன்.

பல்வேறு சிக்கல்கள் பிறகு, பிரமாதமான டெக்னீசியன்கள் உடன் படத்தை எடுத்திருக்கிறார் பார்த்திபன்.
படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசையும், ஸ்ரேயா கோஷலின் குரலும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. பொதுவாக சிங்கிள் ஷாட் படமென்றால் குறைவாக நடிகர்கள் இருப்பார்கள். ஏனெனில் அதனால் தான் பிழைகளுக்கான வாய்ப்பு குறைவு. ஆனால், இந்த படத்தில் எக்கச்சக்க நடிகர்கள் இருந்தாலும் எல்லோரும் சரியாக நடித்ததால் ஒரே ஷாட்டில் படத்தை எடுக்க முடிந்தது.

96 நிமிடங்கள் நடித்து இயக்கி இருக்கிறார் பார்த்திபன். அவர் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இந்த படத்திற்காக தங்கள் உழைப்பை போட்டிருக்கிறார்கள். எல்லா கலைஞர்களுக்கும் பாராட்டுகளை குவித்து தீரவேண்டும். அதேபோல் ஒரே இடத்தில் பல செட் போட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மறக்கும் வகையில் ஏ ஆர் ரகுமான் இசை இருக்கிறது. வித்தியாசமான லைட்டிங் மற்றும் போக்கஸ் எல்லாம் காண்பித்து புது முயற்சியை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இப்படி எல்லாத்தையும் சரியான முறையில் வழிநடத்தி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.

நிறைகள் :

தமிழ் சினிமா உலகில் யாரும் செய்யாத ஒரு புதிய படைப்பை செய்திருக்கிறார் பார்த்திபன்.

படத்தில் நடித்துள்ள எல்லா நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துமே படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

சர்வதேச அளவில் இல்லாமல் தொடமுடியாத உயரங்களுக்கும், செல்ல முடியாத இடங்களுக்கும் இரவின் நிழல் சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் பார்த்திபன் வசனங்களும் காட்சிகளும் பிரமாதமாக வந்திருக்கிறது.

குறைகள் :

ஒரு மனிதனின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் என்கிற ஒற்றை வரியில் திரைக்கதை இருக்கிறது.

கதைக்காக இந்த படத்தை பார்க்க முடியாதது ஒரு மிகப்பெரிய நெகட்டிவ் தான் .

சினிமா விரும்பிகளுக்கும் புதிய சிந்தனையாளர்களுக்கும் இந்த படம் கை கொடுக்கும்.

மொத்தத்தில் இரவின் நிழல்- புதிய முயற்சி

Advertisement