விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக விக்ரம் பிரபு திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் லவ் மேரேஜ். இந்த படத்தை இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கஜராஜ், அருள்தாஸ், ரமேஷ் திலக், சுஷ்மிதா பட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்து இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவர் ரொம்பவே கஷ்டப்படுகிறார். இதனால் சொந்தத்தில் கூட அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார்கள். எப்படியோ அலைந்து திரிந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரில் விக்ரம் பிரபுவுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தத்திற்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவருமே கிளம்பி பெண் வீட்டிற்கு போகிறார்கள்.
நிச்சயதார்த்தமும் நன்றாக நடந்து முடிந்து விட்டது. பின் ஊருக்கு கிளம்பும் வெளியில் தான் அவர்கள் வந்த வண்டியில் பிரச்சனை வருகிறது. இதனால் அன்று இரவு பெண் வீட்டிலேயே தங்கி காலை செல்லலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதுமே ஊரடங்கு வருகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனைவருமே பெண் வீட்டிலேயே தங்கிவிடும் சூழல் வந்தது.
இந்த சமயத்தில் தான் விக்ரம் பிரபு தான் கட்டிக்கப் போகும் பெண்ணிடம் பேசி பழக முயற்சிக்கிறார். ஆனால், கதாநாயகி வேறு ஒருவரை காதலிக்கிறார். அவர் வேறு ஒரு ஜாதி என்பதால் தான் கதாநாயகிக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். அப்போதுதான் விக்ரம் பிரபுவை இவர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது கதாநாயகி ஒரு நாள் தான் காதலித்தவனுடன் ஓடிப் போய் விடுகிறார். இதனால் திருமணம் நின்று போகிறது.
இந்த அதிர்ச்சியில் விக்ரம் பிரபு மயக்கம் போட்டு விழுகிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது? விக்ரம் பிரபுவிற்கு திருமணம் நடந்ததா? மீண்டும் கதாநாயகி மனம் மாறினாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் நாயகன் விக்ரம் பிரபு அவர்கள் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு என்டர்டைன்மென்ட் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.
வயதாகி திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆணினுடைய மனநிலை எப்படி இருக்கும்? அவர் என்னென்ன பிரச்சனை எல்லாம் சந்திக்கிறார் என்பதை எல்லாம் விக்ரம் பிரபு தன்னுடைய நடிப்பின் மூலம் கண்முன்னே நிறுத்தி இருக்கிறார்.
இதை இயக்குனர் கொஞ்சம் நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் வரும் காமெடி எல்லாம் நன்றாக இருக்கிறது. முதல் பாதி நன்றாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதி தான் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே ஜான் ரோல்டனுடைய இசை தான். இரண்டாம் பாதியில் காட்சிகள் பெரிதாக கவரவில்லை, இருந்தாலும் இசையில் பார்வையாளர்களை உட்கார வைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒருமுறை சென்று பார்க்கும் படமாக இருக்கிறது.
நிறை:
விக்ரம் பிரபு நடிப்பு
கதைக்களம் நன்றாக இருக்கிறது
படத்தில் நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
முதல் பாதி நன்றாக இருக்கிறது
நகைச்சுவை அருமை
குறை:
இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்துகிறது
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை இயக்குனர் கொடுத்திருக்கலாம்
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
சில கதாபாத்திரத்தை தெளிவாக காண்பித்திருக்கலாம்
மொத்தத்தில் லவ் மேரேஜ் - 90ஸ் கிட்ஸை கவரும்