தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் நடிகர் விக்ரம். தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் சினிமாவில் இந்த உயரத்தை அடைய பல கட்டங்களை கடந்து தான் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் தான். இந்த நிலையில் நடிகர் விக்ரம் அன்றும் இன்றும் வாங்கிய சம்பளம் குறித்து பேசியுள்ளார் அழகப்பன்.

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர்களில் ஏ எல் அழகப்பனும் ஒருவர். இவர் 2004 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமில்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார். இவருடைய மகன் தான் ஏ.எல். விஜய் மற்றும் உதயா.

Advertisement

சினிமாவை பொறுத்த வரை எதையுமே நம்மால் கணித்து சொல்ல முடியாது.யாருக்கு நேரம் நல்ல இருக்கோ அவர்களுடைய மார்க்கெட் சினிமாவில் உயர்ந்து அவர்களுடைய சம்பளமும் அதிகம் ஆகும்.அதே போல் முதலில் வெறும் 5,000 ரூபாய் என்னிடம் சம்பளம் வாங்கினார் விக்ரம். அப்பாஸ் நடிப்பில் ‘இனி எல்லாம் சுகமே’ என்ற படத்தை தயாரித்திருந்தேன். அந்த படத்தில் அப்பாஸுக்கு டப்பிங் கொடுத்தது விக்ரம் தான்.

ஆனால், நான் அவருக்கு தெய்வத்திருமகன் படத்தில் நானே 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு கொடுத்தேன். அதன் பின்னர் தாண்டவம் படத்தில் 7 கோடி ரூபாய் வாங்கி கொடுத்தேன். இப்போ அவர் சங்கர் படமெல்லாம் பன்றாரு, அப்போ ராமராஜன் 1 லட்சம் சம்பளம் வாங்கிய போது ரஜினிக்கு 30 ஆயிரம் தான் சம்பளம். இப்போ ராமராஜன் நிலை என்ன ரஜினி நிலை என்ன ? எல்லாம் சினிமாவின் மார்க்கெட் தான் காரணம் என்று கூறி உள்ளார் அழகப்பன்.

Advertisement
Advertisement