தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது நேற்று இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் வெளியான போதிலும் இன்னமும் பல்வேறு திரையிடங்களில் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார். இந்தப் படத்தில் பழைய விக்ரம் படத்தில் இருந்து நிறைய விஷயங்களை தொடர்ச்சியாக வைத்ததோடு மட்டும் அல்லாமல் வெவ்வேறு படங்களில் இடம்பெற்ற விஷயங்களை கூட லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : அப்போ அஜித் ஓட்டுவது எல்லாம் சொந்த பைக் இல்லையா ? அவர் ஓட்டும் பைக்குகள் எல்லாம் இவருடையதானாம்.

சூர்யாவின் மாஸ் காட்சி :

அதிலும் குறிப்பாக தமிழுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ராடு ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது அந்த வசனத்தைக் கூட படத்திற்கு பொருந்தும் வகையில் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதே போல சூர்யா பேசும் ’27 வருஷம் ஆச்சி இந்த இடத்தை உருவாக்க, அப்பானோ பாட்டனோ தூக்கி கொடுத்துடல’ என்ற வசனமும் சூர்யாவின் 27 ஆண்டு சினிமா பயணத்தை குறிப்பது போலவே இருந்தது.

Advertisement

சூர்யாவிற்கு ஆளவந்தான் reference :

இது ஒருபுறம் இருக்க சூர்யாவிற்கும் கமல் படத்தின் ரெபரென்ஸை பயன்படுத்தி இருக்கிறார் லோகேஷ். சூர்யா வரும் காட்சியில் ஒருவரின் தலையை வெட்டிவிட்டு அந்த தலையை பார்த்து ஒரு ஈவிலான சிரிப்பை சிரிப்பார் சூர்யா. அந்த காட்சியும் கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் நந்துவாக வரும் கமல், கிளைமாக்ஸில் காசை சுண்டிவிட்டு வாயில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு சிரிப்பை சிரிப்பார். அதே காட்சியை தான் சூர்யாவிற்கு பயன்படுத்தி இருக்கிறார் லோகேஷ்.

Advertisement

விஜய் சேதுபதிக்கும் கமல் Reference :

அதே போல இந்த படத்தில் விஜய் சேதுபதியின் என்ட்ரி படு மாசாக அமைந்திருந்தது இதுவரை விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த படத்திலேயே இதுதான் சிறந்த என்ட்ரி என்று கூட ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் இதுவும் கமல் படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் சுட்ட ஒரு விஷயம் தான் என்பது பலர் அறிந்திராத ஒன்று அது வேறு எந்த படமும் இல்லை கமல் நடிப்பில் வெளியான குணா படம் தான்.

குணா படத்தின் காட்சி :

குணா திரைப்படத்தில் நாயகியை கமலஹாசன் காரில் கடத்திச் சென்று ஒரு மலையில் அடைத்து வைத்திருப்பார் அப்போது கமலுக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கதாநாயகி தப்பிக்க பார்ப்பார் அந்த காட்சியில் கமல் உண்மையாகவே அந்த ஆறின் மீது மோதி விடுவார் அடுத்த காட்சியிலேயே கமல் காரில் படுத்தபடியே பல்டி அடித்துக்கொண்டு கீழே இறங்கி நிற்பார் இதே போலத்தான் விஜய் சேதுபதியின் என்ட்ரியையும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் வடிவமைத்து வைத்திருக்கிறார்

Advertisement