அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.
இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது. இதை இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.
இதையும் பாருங்க : அந்த வீடியோவை Pause பண்ணி விமர்சித்தாங்க, அதில் இருந்து தான் நான் எப்போதும் புடவை அணிந்தேன் – சாய் பல்லவி சொன்ன அந்த ஒரு டான்ஸ் video
ஏகே 61 படம்:
அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் செய்து வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது.
ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு:
மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ராஜதந்திரம் வீரா உட்பட பல நடிகர்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது படத்தின் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அஜித் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா பயணம் செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்:
அப்போது ஒவ்வொரு நாட்டுக்குச் செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் உடன் இருக்கும் நபர் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணம் செய்யும் பைக்கை அவருக்கு கொடுத்து உதவுவது அங்கு பைக் வாடகை நிலையம் வைத்திருக்கும் Mark Coventry என்பவர் தான். இவர் மிகப்பெரிய அளவில் பைக் வாடகை நிலையம் வைத்திருக்கிறார்.
Mark Coventry குறித்த தகவல்:
மேலும், ஒவ்வொரு நாட்டுக்கும் அஜித் பயணம் செல்லும்போது அவர் விரும்பும் பைக்கை வாடகைக்கு கொடுத்து வருகிறார் Mark Coventry. இவருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது . இந்நிலையில் அஜீத் ஐரோப்பிய பயணத்தை முடித்துவிட்டு இந்த மாத இறுதியில் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.