விஜய், அஜித் தொடர்பான தொடர்பாக பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் விக்ரம் அளித்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ‘தங்கலான்’ படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’. கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
தங்கலான் படம்:
இந்த விழாவில் நடிகர்கள் தங்களின் படம் அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்கள். தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் பிரமோஷனுக்காக விக்ரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் செய்தியாளர் ஒருவர், விஜய், அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் உங்களுக்கு இல்லையே? காரணம் என்ன? என்று கேட்டு இருக்கிறார்.
"நீங்க சொன்ன நடிகர்களுக்கெல்லாம் Haters இருக்காங்க எங்க ஆளுக்கு இல்ல" என்னுடைய ரசிகர்கள் பற்றி உங்களுக்கு தெரியல விக்ரம் சொன்ன 'நச்' பதில் #Thangalaan | #Vikram | #PaRanjith | #TamilCinema | #NewsTamil | #NewsTamil24x7 pic.twitter.com/IHOwGvULWr
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) August 11, 2024
விக்ரம் கொடுத்த பதில்:
அதற்கு விக்ரம், எனக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அது உங்களுக்கு தான் தெரியவில்லை. ரசிகர்கள், ஜென்ரல் ஆடியன்ஸ் என்று இருக்கிறார்கள். எல்லாருடைய ரசிகர்களும் எனக்கு ரசிகர்கள் தான் என்று கூறியிருக்கிறார். உடனே அங்கிருந்த விக்ரமின் ரசிகர் ஒருவர், நீங்க சொன்ன நடிகர்களுக்கு haters நிறைய இருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய நடிகர் விக்ரமுக்கு தான் haters கிடையாது என்று சொன்னவுடன் அரங்கமே கைதட்டி கரகோஷம் போட்டது.
விக்ரம் திரைப்பயணம்:
தமிழ் சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். மேலும், சீயான் விக்ரம் என்றாலே நடிப்புக்காக எப்பேர்பட்ட வேடங்களையும் எதையும் துணிந்து செய்வார் என்று நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
https://www.youtube.com/shorts/BxpKagcoTSY
விக்ரம் குறித்த தகவல்:
மேலும், இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் மிரட்டி இருந்தார். இந்த படம் இவருக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.






