Adkவுடன் சேர்ந்து அசீம் பற்றி புரணி பேசிய விக்ரமன் – குறும்படம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.

0
485
vikraman
- Advertisement -

விக்ரமனுடன் சேர்ந்து ஏ டி கே புரளி பேசி இருக்கும் குறும்படத்தை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறார்கள். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறது. இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு சர்ச்சை தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-
vikraman

மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். வழக்கம் போல் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

நிகழ்ச்சியில் விக்ரமன்- அசீம்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து விக்ரமன்- அசீம் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து வருகிறார்கள். இருவருக்குமே சுத்தமாக செட்டே ஆகவில்லை. ஏதாவது, ஒரு பிரச்சனையில் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் டாஸ்கில் கடுமையாக இருவரும் விவாதம் செய்து இருந்தார்கள். பிறகு விக்ரமன், அசிமை பார்த்து பிரபலத்துக்காக ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருந்தார்.

விக்ரமன்- அசீம் சண்டை:

உடனே அசீம் , நீங்கள் அந்த பிரபலமாக இருக்கும் நபரை தாக்கி பேசினால் நீங்கள் பிரபலமாக ஆகிவிடலாம் என்று சொல்கிறார். பின் விக்ரமன், நீ ஒரு அட்டகத்தி என்பதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று கூறினார். இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி விவாதம் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களுமே அசீமை குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

புரளி பேசும் விக்ரமன்- ஏடிகே:

இந்த நிலையில் விக்ரமன் உடன் சேர்ந்து ஏடிகே அசிமை குறித்து புரளி பேசி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் குறும்படமாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதைப் பார்த்த பலருமே பொதுவெளியில் நல்லவராக போர்வை போற்றிக் கொண்டு பிறரை இப்படித்தான் புறம் புரளி பேசுவதா? இதுதான் உங்கள் நியாயம்? தர்மமா? விக்ரமன் என்று விமர்சித்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement