விக்ரம் படத்தில் நடித்ததற்காக நாங்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்று வில்லேஜ் குக்கிங் சேனல் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடுயூபில் எத்தனையோ சமையல் சேனல் இருந்தாலும் லுங்கி, தலப்பா கட்டிக்கொண்டு கிராமத்தில் உள்ள அழகான லொகேஷனில் சமைப்பதும், சமைத்து முடித்ததை தாங்கள் மட்டும் உண்ணாமல் அருகில் உள்ளவர்கள், ஆதரவற்ற ஆசிரமங்களுக்கு பரிமாறி நம் மனதையும் நிறைய வைத்த சேனல் village cooking chennal.

இந்த சேனல் தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கிறது. இன்னிக்கி ஒரு புடி, always welcomes you என்ற வசனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள் இந்த village cooking டீம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்த village cooking டீம் இளைஞர்களுடன் சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது. அதோடு ஒரு தேசிய கட்சித் தலைவர் தமிழ் யூடுயூப் சேனலை விசிட் அடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
village cooking சேனல்:
இப்படி ராகுல் காந்தி வந்து சென்ற வரை 70 மில்லியன் சப்ஸ்ரைபர்கள் வந்து இருந்த நிலையில் 5 மாதத்தில் 30 10 மில்லியன் சப்ஸ்ரைபர்களை பெற்று இருக்கிறது இந்த சேனல். 10 மில்லியன் என்றால் 1 கோடி பேர் என்ற இமாலய பாலோவர்ஸ். தென்னிந்தியாவிலேயே 10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற முதல் சேனல் அதுவும் ஒரு தமிழ் சேனல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது இந்த டீம். தற்போது இந்த சேனல் 2.27 கோடி சப்ஸ்ரைபர்களை பெற்று வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சேனலை பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார்கள். இந்த சேனல் மூலம் மாதம் 10 லட்சம் சம்பாதித்து வருகிறார்கள்.

வில்லேஜ் குக்கிங் சேனல் பேட்டி:
இந்நிலையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்திருக்கிறது. இந்த மாநாட்டில் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள். அதில் youtube-ல் கலக்கும் தி வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்களும் பங்கேற்று இருந்தார்கள். அப்போது அவர்கள் தங்களுடைய சேனலில் விளம்பர பிரமோஷன் செய்யாததற்கான காரணம் குறித்து சொன்னது, நாங்கள் இந்த சேனல் துவங்குவதற்கு முன்பே சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு தான் ஆரம்பித்தோம். இது செய்யணும் இது செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் தான் தொடங்கினோம்.
விளம்பரத்தில் நடிக்காத காரணம்:
அந்த வகையில் படம் விளம்பரம் எதுவாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடிக்கணும் என்று இருந்தோம். காரணம், பணத்திற்காக செய்ய ஆரம்பித்தால் அவர்களுக்கு கீழே தான் நாங்கள் நடக்க வேண்டும். எங்கள் வீடியோவில் அவர்களுக்கு சில நொடிகளை ஒதுக்க வேண்டும். எங்கள் ஆடியன்ஸ் எங்கள் வீடியோவை பிடித்திருப்பதால் தான் பார்க்கிறார்கள். அதில் எங்களுக்கு மனம் ஒப்பவில்லை. எங்களுடைய நோக்கம் மாறிவிடும் என்பதால் தான் நாங்கள் பணத்திற்காக நடிக்கவில்லை.
View this post on Instagram
விளம்பர வாய்ப்பு குறித்து சொன்னது:
அந்த வகையில் கமல் நடித்த விக்ரம் படத்தில் கூட நாங்கள் ஒரு ரூபாய் கூட வாங்கி நடிக்கவில்லை. விளம்பரங்களுக்காக கூட நாங்கள் வாங்கவில்லை. இந்த சேனல் துவங்கிய சமீபத்தில் சாக்லேட் நிறுவனம் ஒன்று பத்து நொடி விளம்பரத்திற்கு நாலரை லட்சம் தருகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். இருந்தாலும் நாங்கள் முடியாது என்று மறுத்து விட்டோம். அதன் பிறகும் ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. அதை செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.






