ஆபரேஷன் செய்ததால் மாதவனுக்கு பதிலாக நடிக்கும் சிம்பு பட நடிகர் ! புகைப்படம் உள்ளே

0
4966
Actor Sonu
- Advertisement -

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த மாதவன் ஒரு கட்டத்தில் தனது பாதையை மாற்றிக் கொண்டு கரடுமுரடான ஆளாக நடிக்க துவங்கிவிட்டார்.இவர் நடிப்பில் வெளியான இறுதி சுற்று ,விக்ரம் வேத போன்ற படங்களில் தனது ஆசத்ய நடிப்பை வெளிப்படுத்தினார் மாதவன்.

Sonu-Sood

சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கில் வெளியான என். டி .ராவ் நடித்த ஹிந்தி ரீ மேக்கில் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் வில்லனாக நடிகர் மாதவன் நடிப்பதாக இருந்தது ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து மாதவன் விலகிவிட்டார்.

- Advertisement -

இதற்கு காரணம் சென்ற மாதம் நடிகர் மாதவன் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட தோள்பட்டை பிரச்னையால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் நடிகர் மாதவன் 5 மாதங்கள் படங்களில் நடிக்கப்போவது இல்லையாம்.இதனால் தற்போது அந்த வில்லன் கதாபாத்திரத்தில் சந்திரமுகி,ஒஸ்தி,தேவி படத்தில் வில்லனாக நடித்த சோனு சுத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கன்வே ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள சோனு சுத் இந்த படத்திலும் அசத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்த படத்தில் மாதவன் நடித்திருந்த்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே பலரின் ஏக்கம்.
ஆனால் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் புரட்சி தளபதி விஷால் நடிக்கவுள்ளார்.ஒருவேளை அந்த படத்திலாவது மாதவன் வில்லனாக நடித்தால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

Advertisement