இவருடைய இரண்டாவது மகள் பெயர், ஜூலைகா. 2016ல் வெளிவந்த 'பூதாளம்' என்ற படத்தில் பூமாதேவி கேரக்டரில் நடித்திருப்பார் ஜூலைகா. இந்த படத்தில் தன்னுடைய மகள் மற்றும் மூன்று மகன்கள், மகபிர், கஜினி மற்றும் ஷெர்ஷா ஆகியயோரைம் நடிக்க வைத்துள்ளார் மன்சூர். இந்த படத்தில் மன்சூர் ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.
இன்னும் சில காலத்தில் மன்சூரின் வாரிசுகள் வளர்ந்து திரையுலகை கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய மூத்த மகன் தற்போது ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.




