ஒட்டு மொத்த உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரானா வைரஸ் தான். இந்த கொரானா வைரஸ் பாதிப்பால் தற்போது இந்தியா ரஷ்யாவை முந்திக்கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது. கொரானா வைரஸ் தாக்குதலால் பல நிறுவனங்களும், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பத்தாவது பொதுத் தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் குறித்து தற்போது நடிகர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். சின்ன குழந்தைகளுக்கு கூட ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. அவர்களுக்கு நேரங்களை பிரித்து வகுப்புகள் நடத்தும் முறை மிகவும் கொடுமையாக உள்ளது. இந்த மன அழுத்தம் அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கழுத்து, மூளை எல்லாம் அதிக அளவு பாதிக்கப்படும். மருத்துவரே மொபைல், தொலைக்காட்சியை 8 மணி நேரம் பார்த்தால் உடல் உறுப்புகள் அதிக அளவு பாதிக்கப்படும் என்று சொல்வார்கள்.

Advertisement

ஆரம்பத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை மொபைல் பார்க்காதே, டிவி பார்க்காதே என்று சொல்லுவோம். ஆனால், காலம் போய் தற்போது டிவி பாரு, மொபைலை பாரு என்று சொல்லுகிறோம். இதனால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கபடுகிறார்கள். இதை பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சிலபஸ் முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகிறார்கள்.

இது மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் கஷ்டமான விஷயம் தான். மற்ற மாநிலத்தில் என்ன செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் பாருங்கள். மற்ற இடங்களில் எல்லாம் ஆசிரியர்கள் படிக்கும் பாடங்களை பதிவு செய்து மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பார்த்து படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

Advertisement

இதனால் அவர்களுக்கு மன அழுத்தமும் இருக்காது. அதே போல் நீங்களும் சில சில முயற்சிகளை கொண்டு வந்தால் நல்லா இருக்கும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் முறையை கொண்டு வாருங்கள். இது என்னுடைய ஒரு வேண்டுகோளாக தான் கேட்கிறேன் என்று கூறினார். இப்படி ஆர்ஜே பாலாஜி கூறிய கருத்திற்கு நடிகர் கிரண் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் இந்த coronaவிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் கல்லா கட்டியது தனியார் பள்ளிகள் மட்டுமே இருக்கும். No EB charge, No maintenance charge, even they collecting same fee. அத விட uniformக்கும் சேர்ந்து வாங்கிய பெருமை அவர்களையே சேரும் என்று கூறி உள்ளார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement