தமிழ் திரையுலகில் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘விசாரணை’. இந்த படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக ‘அட்டகத்தி’ புகழ் தினேஷ் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் ‘கயல்’ ஆனந்தி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், இயக்குநர் சமுத்திரக்கனி, ‘பொல்லாதவன்’ கிஷோர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தினை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. இப்படம் பிரபல எழுத்தாளர் எம். சந்திரக்குமார் என்பவர் எழுதிய ஒரு நாவலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாவலின் பெயர் ‘லாக்கப்’.

Advertisement

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், ‘லாக்கப்’ என்ற நாவலின் எழுத்தாளர் சந்திரசேகர் கோவையில் இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர்களுக்கு இந்த லாக் டவுன் டைமில் உணவு கொடுத்து உதவி செய்து செய்து வருகிறார். அப்போது, அங்குள்ள ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே, ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் ஸ்பாட்டிற்கு வருவதற்குள் குழந்தை வெளியே வர தொடங்கியிருக்கிறது.

Advertisement

ஆகையால், எழுத்தாளர் சந்திரக்குமாரும், அங்கிருந்த சில மக்களும் அப்பெண்ணிற்கு அங்கயே வைத்து பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பிறகு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்ததும், தொப்புள் கொடியை வெட்டி தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான உதவியை செய்திருக்கின்றனர். இது தொடர்பாக எழுத்தாளர் சந்திரக்குமாரின் மகள் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

Advertisement
Advertisement