நடிகர் விஷால் இயக்குனராக அவதாரம் எடுத்த காரணத்தை பற்றி கூறி இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.

கடைசியாக விஷால்- சுந்தர்.சி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விசால் அவர்கள் மகுடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துஷாரா தான் கதாநாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அஞ்சலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
மகுடம் படம்:
இந்த படத்தினுடைய படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படி இருக்கும் நிலையில் கருத்து வேறு காரணமாக மகுடம் படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை நடிகர் விஷாலே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இது தொடர்பாக விஷால் வெளியிட்ட பதிவில், என்னுடைய புதிய படமான மகுடம் படத்தின் இரண்டாவது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.

விஷால் பதிவு:
அதோடு படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்தில் நான் எடுத்த நீண்ட காலமாக நிலுவையில் இருக்க இந்த முடிவை எடுத்து தெளிவுபடுத்துகிறேன். இது நான் இயக்குனராக அறிமுகமாகும் படமாக இருக்கும். இந்த தருணத்தை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், சூழ்ச்சிகள் என்னை படத்தின் கிரியேட்டிவ்வாக மறுவேலைப்பாடுகள் செய்து நானே படத்தை இயக்கும் இடத்துக்கு வந்துள்ளது. கட்டாயத்தினால் அல்ல பொறுப்புணர்வால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். ஒரு நடிகராக சினிமா என்பது எங்களை நம்பும் பார்வையாளர்களுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் தங்கள் நம்பிக்கையையும் கடினமாக சம்பாதித்த பணத்தையும் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு உறுதிப்பாடு.
Wishing everyone a very Happy Diwali/Deepawali,
— Vishal (@VishalKOfficial) October 20, 2025
May this festival of lights as always bring joy, happiness, and prosperity to everyone.
On this special occasion, I wish to officially share the 2nd look of my current film Magudam/Makutam and also reveal a long pending stand… pic.twitter.com/5LygqZezCw
இயக்குனர் விளக்கம்:
இதை எப்போதும் நான் நம்புகிறேன். இப்போது இந்த மகுடம் படத்தின் இயக்குனர் பொறுப்பை ஏற்பது தான் தயாரிப்பாளரின் முயற்சிகள் பாதுகாக்கப்படுவதையும், வணிக சினிமாத்தில் பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதையும் உறுதி செய்ய சரியான முடிவாகும். சில நேரங்களில் சரியான முடிவு எடுப்பது என்பது பொறுப்பை ஏற்ப்பது. இதுதான் இந்த தீபாவளி என்று கூறியிருக்கிறார்.






