ஆர்.கே.நகரில் தனியாக போட்டி, கூட்டணி இல்லை : விஷால் அறிவிப்பு

By Ajju · 2/12/2017
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் மருது கணேஷூம் அ.தி.மு.க சார்பில் மதுசூதணனும் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகவும் களமிறங்கவுள்ளனர். மேலும், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், நடிகர் விஷாலும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருடைய நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. திங்கள்கிழமை, அவர் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். அவர், ஏற்கெனவே நடிகர் சங்கச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை விஷால் தைரியாமாகத் தெரிவித்துவந்த நிலையில் தற்போது அரசியில் இறங்கியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full