இந்நிலையில், நடிகர் விஷாலும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருடைய நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. திங்கள்கிழமை, அவர் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். அவர், ஏற்கெனவே நடிகர் சங்கச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை விஷால் தைரியாமாகத் தெரிவித்துவந்த நிலையில் தற்போது அரசியில் இறங்கியுள்ளார்.சினிமாReading time · 1 min





