கட்டபஞ்சாயத்து செய்த விஷால்.! சிம்பு தொடர்ந்த வழக்கு.! நீதி மன்ற தீர்ப்பு இதான்.!

By Rajkumar · 8/1/2019

சமீப காலமாக நடிகர் விஷால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், நடிகர் விஷால் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். தமன்னா, ஸ்ரேயா, ஹீரோயின்களாக நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

இதையும் படியுங்க : நீ ஒரு ஆம்பளையாடா ! உனக்கெல்லாம் அசிங்கமா இல்லையா ! AAA இயக்குனரை போனில் திட்டிய சிம்பு

இதையடுத்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது பரபரப்பு புகார் கூறினார். அதில், சரியான நேரத்துக்கு வந்து சிம்பு நடித்துக் கொடுக் காததால் பட்ஜெட் அதிகமானது என்றும் இதனால் ஏற்பட்ட பல கோடி நஷ்டத்தை சிம்பு ஈடுகட்ட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியும் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தன்னுடைய பேருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மைக்கேல் ராயப்பன் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும், தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும்' குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், புதிய படங்களில் தான் ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும்சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்
ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full