அரசியலுக்கு வரப்போகிறார் விஷால்…புது கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது

0
1033
Vishal
- Advertisement -

தமிழ்திரையுலகிற்கு சண்டைக்கோழி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் விஷால்.
பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து வந்தார். இன்றுமுதல் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த துப்பறிவாளன் படம் வெளியாகியுள்ளது.Vishal நடிகர் சங்க தேர்தலில் பலமான சரத்குமார் அணியை தோற்கடித்து நடிகர் விஷால் நடிகர்சங்க தலைவரானார்.பின்னர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் மூலமாக நிதி திரட்டி கட்டிடம் கட்ட தொடங்கினார். பின்னர் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை வாங்கப்பட்டது.
மீண்டும் நீதிமன்றம் சென்று கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி தற்போது கட்டப்பட்டு வருகின்றது.

-விளம்பரம்-

மற்றொரு புறம் இணையதளங்களில் புதுப்படங்களை பதிவேற்றிடுபவர்களை கண்டறிந்து அவர்களையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்.இவ்வாறு பல்வேறு அதிரடிகளை திரையுலகில் செய்து வரும் விஷால் தற்போது அரசியல் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vishalவரும் டிசம்பரில் விஷால் தலைமையில் அரசியல் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அந்த கூட்டத்தில் விஷால் புதுகட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

- Advertisement -

ஏற்கனவே ரஜினி,கமல்,விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை எடுப்பதாக செய்திகள் வெளிவரும் வேளையில் விஷாலும் அரசியலுக்கு வரப்போகுது குறித்த செய்திகள் திரையுலகில் வட்டமடித்து வருகின்றது.
Vishalஇதையும் படிங்க: தமிழ்கன் அட்மின் சிக்கியது இப்படிதான்.!
விஷால் டிசம்பரில் என்னதான் முடிவெடுக்க போகின்றார் என்பதை பார்ப்போம்.

Advertisement