அனகோண்டா சர்ச்சை குறித்து முதன் முறையாக பதில் அளித்த விஷால். என்ன ஓப்பனா இருக்காரு

0
2522
Vishal
- Advertisement -

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி விஷால் சர்ச்சை கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் விஷால் குறித்து பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி பேசிய அனகோண்டா வசனம் பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் பேசி இருக்கும் வார்த்தை தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

-விளம்பரம்-

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர்களுடன் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லாரி ஓன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்து செட்டில் மோதி இருந்தது. ஆனால், இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அடிபடவில்லை. தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சர்ச்சையான பாடல்:

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான ஐ லவ் யூ டி என்ற பாடல் கொஞ்சம் ஆபாசமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த பாடலின் கடைசியில் நல்ல வேலை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்று விஷால் சொல்லி இருப்பார். இதுதான் தற்போது பயங்கர சர்ச்சையாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக விசால் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்தது இருந்தார். அதில் அவர், முன்னாடி நான் சீன் பேப்பர் பார்க்கவில்லை. படப்பிடிப்பின் போது ஸ்கூட்டர் வந்து இடிக்கும்.

விஷால் கொடுத்த விளக்கம்:

அப்போது நல்ல வேலை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகவில்லை என்று இயக்குனர் சொல்ல சொன்னார். உடனே நான் டேய், எதுக்குடா இது. இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருக்கு. நீ மறுபடியும் கிளப்பி விடாதே என்று சொன்னேன். இதற்கு இயக்குனர் இது டபுள் மீனிங் கிடையாது. இதை மட்டும் பார்த்தாங்க என்றால் டபுள் மீனிங் என நினைப்பாங்க. ஆனால், கிளைமாக்ஸ் பார்க்கும்போது மக்கள் எல்லாத்தையும் புரிஞ்சிப்பாங்க என்றார். அவர் சொன்னது போல ஐ லவ் யூ பாடலுக்கு இணையத்தில் நல்ல ட்ரெண்டிங் ஆனது. இப்படி நான் பேசி இருப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள மார்க் ஆண்டனி படத்தை பாருங்க என்று கூறியிருக்கிறார்.

Advertisement