என்னது லியோ படத்தில் இவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா ? சஸ்பென்ஸை போட்டு உடைத்த விஷால்.

0
1391
Vishal
- Advertisement -

விஜயின் லியோ படத்தில் தவறவிட்ட வாய்ப்பு குறித்து விஷால் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனன் பிறந்தநாள். இதனால் லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

லியோ படம்:

அந்த வீடியோவில் அர்ஜுன் தெறிக்க என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை பார்த்த பலருமே வீடியோவுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் விஷால் அவர்களும் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று தெரியாது. ஆனால், இதன் உரிமையாளர் ஆக்சன் கிங் அர்ஜுன் சார். என்னுடைய குரு, ஆசான், முன்னோடி, நான் நடிகனானத்திற்கு காரணமான அர்ஜுன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

விஷால் பதிவு:

அவருக்கு வாழ்க்கையில் வெற்றி, அமைதி, செழுமை, மகிழ்ச்சியாகவே தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வாழ்விலும் கிடைக்க வாழ்த்துகிறேன். மீண்டும் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் சுதந்திர நாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதோடு லியோ படத்தில் விஷால் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. விஷால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே லோகேஷ் சென்று லியோ படம் குறித்து கதை சொல்லி இருக்கிறார். விஷாலுக்கும் லியோ படத்தில் நடிக்க ஆசைதான். ஏற்கனவே விஷால், நான் தளபதியின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார்.

-விளம்பரம்-

விஷால் விளக்கம் :

ஆனால், விஷால் மார்க் ஆண்டனி படத்தில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கிடைக்காததால் லியோ படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷாலிடம் லியோ படத்தில் காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஷால் படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்கத்தான் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், நான் பண்ண முடியவில்லை என்பதால் அந்த கதாபாத்திரத்தை மாற்றி விட்டார்கள். எப்போதும் ஒரு படம் முடித்துவிட்டு தான் அடுத்த படத்தை பண்ணுவதுதான் என் பழக்கம்.

மேலும் லோகேஷ் கனகராஜும் நான்கு மாதங்கள் உங்களால் படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று புரிந்து கொண்டார்’ என்று கூறியுள்ளார். விஷாலின் இந்த பேட்டி மூலம் லியோ படத்தில் அர்ஜுனும் விஜயும் அண்ணன் தம்பி என்பது போலவே தெரிகிறது. இருந்தும் படத்தின் அந்த கேரக்டரை லோகேஷ் மாற்றி விட்டார் என்று விஷால் சொன்னாலும் ஒருவேலை விஜய் மற்றும் அர்ஜுன் அண்ணன் தம்பியாக இருந்தால் படம் வேற லெவல் தான்.

Advertisement