இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குறித்து மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் விஷால் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ஆகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார்.

அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் மார்க் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

மார்க் ஆண்டனி படம்:

இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். படத்தில் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பின் 1975 இல் போன் மூலம் டைம் ட்ராவல் செய்யும் கருவியை செல்வராகவன் கண்டுபிடிக்கிறார். இந்த டைம் ட்ராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் செல்வராகவன் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் போது தான் அவர் இறந்து விடுகிறார்.

படத்தின் கதை:

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1995இல் டைம் டிராவல் போன் விஷால் உடைய மகனுக்கு கிடைக்கிறது. இதை வைத்து அவர் தன்னுடைய தந்தை ஆன்டனியால் தனக்கு நடந்த கசப்பான விஷயங்களை மாற்ற நினைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? இதில் எஸ் ஜே சூர்யா வின் பங்கு என்ன? விஷால் நினைத்ததை வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது.

Advertisement

படத்தின் வெற்றி விழா:

இந்நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் படத்தின் நாயகன் விஷால், எஸ் ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் விஷால் கூறியிருந்தது, இந்த படம் வெற்றி பெறும் என்று பலருமே சொன்னார்கள். ஆதிக் இனிமேல் தயவு செய்து எனக்கு கடிதம் மட்டும் எழுத வேண்டாம். உன் மேல் இருக்கும் நம்பிக்கையில் அடுத்த படம் பண்ணுவதற்கு நான் டேட் கொடுப்பேன். ஆரம்பத்தில் ஆதிக் உடன் பண்ணும் போது நிறைய பேர் அவர் கூட ஏன் படம் பண்ணுறீங்க? என்று கேட்டார்கள். எனக்கு கண்டன்ட் பிடித்திருந்தது.

Advertisement

இயக்குனர் குறித்து சொன்னது:

அந்த தம்பி மேலையும் நம்பிக்கை இருக்கு. கரெக்டா பண்ணுவாரு என்று சொன்னேன். என்னிடம் அப்படி கேட்டா அதே ஆட்கள் தான் இப்போ கால் பண்ணி படம் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் நன்றாக இயக்கியிருக்கிறார். தற்போது நிறைய பேர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கால் பண்ணி அடுத்தடுத்த டேட் எங்களுக்கு கொடுங்கள் என்று சொல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இதுதான் சினிமா உலகம். எங்களை வாழ வைக்கிற மக்களாகிய உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆதிக் பொறுத்தவரை அவனுக்கு இதுதான் முதல் படம் மாதிரி. இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருக்கிறது இது நியாயமான வெற்றி கஜினி முகமது எனக்கு மிகவும் பிடிக்கும் தற்போது அவரைப்போல 16 வருடம் கழித்து வெற்றி பெற்றுள்ளேன். இனிமேல் தான் அவனுடைய வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கப் போகிறது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

Advertisement