முதன் முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகும் ஹீரோ.! யாருனு பாருங்க.!

0
841
- Advertisement -

இயக்குனரான கௌதம் மேனன் தமிழில் இதுவரை கமல், அஜித், சிம்பு போன்ற பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் சிம்புவிற்கு பெரும் திருப்பு முனை படமாக அமைந்தது.

-விளம்பரம்-

தற்போது தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்ட , விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் தாமதமாகி வரும் நிலையில் தற்போது விஷாலை வைத்து அடுத்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

விஷால் தற்போதைக்கு அயோக்யா என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இது முடிந்த பிறகு நான் சிவப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி படங்களை இயக்கிய திருவின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதெல்லாம் முடிந்த பிறகு தான் கௌதம் மேனன் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

Vishal

அதே போல தற்போது கௌதம் மேனனும் விக்ரமின் துருவ நட்சத்திர பணிகளை அடுத்த மாதம் துவங்க இருக்கிறார். விக்ரம் தற்போது கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு துருவ நட்சத்திர பணிகளை துவங்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement