பான் இந்திய ஸ்டார்கள் நடித்து இருக்கும் 'கண்ணப்பா' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
டோலிவுட்டில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கண்ணப்பா. இந்த படத்தை மோகன் பாபு தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார், மது, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், அக்ஷய்குமார், பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். A.V.A எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். சிவ கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத தின்னன் எப்படி சிவ பக்தரர் ஆனார் என்பதுதான் படத்தின் கதை. இரண்டாம் நூற்றாண்டில் உடுமூரில் இந்த கதை நடக்கிறது. உடுமூர் காட்டுப்பகுதியில் ஐந்து குடிகள் இருக்கிறார்கள். அவற்றில் ஒரு குடிக்கு தலைவர் தான் சரத்குமார். அவருடைய மகன் தான் தின்னன்.
இவரின் சிறுவயதில் தன்னுடைய நண்பரை அம்மனுக்கு பலி கொடுத்ததால் கடவுள் மீது நம்பிக்கையே இல்லை. அதனாலே இவர் கடவுள் ஒரு கல் என்று இருக்கிறார்.
இவர்கள் வசிக்கும் பகுதியில் தான் வாயுலிங்கம் இருக்கிறது. அதை மோகன் பாபு பூஜை செய்து வருகிறார். அந்த வாயுலிங்கத்தின் மீது காளா முகி கண் வைக்கிறார். தன்னுடைய ஆட்களை அனுப்பி அந்த லிங்கத்தை அபகரிக்க நினைக்கிறார். அதோடு அவர்களுடைய குடியில் உள்ள பெண்களை எல்லாம் தொந்தரவு செய்கிறார். இதனால் தின்னன் கோபம் கொண்டு அவர்களை எல்லாம் கொன்று விடுகிறார். இதை அறிந்த காளா முகி அந்த குடிகள் மீது படையெடுக்கிறார்.
தின்னனை கொன்று வாயு லிங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று காளா முகி திட்டம் போடுகிறார். இதனால் அவர்களை தடுக்க அந்த ஐந்து குடிகளுமே ஒன்று சேர்கிறது. இதற்கிடையில் தின்னன் காதலிக்கும் பிரீத்தி முகுந்தனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இதனால் தின்னன் சண்டை போடுகிறார். தின்னன், தன் காதலியை திருமணம் செய்பவனை கடுமையாக தாக்கியதால் குடியை விட்டு வெளியேற்றுகிறார்கள். அந்த நேரத்தில் தான் காளா முகி தாக்குதல் நடத்துகிறார்.
இதனால் தின்னனின் தந்தை ஆன சரத்குமாரை கொண்டு விடுகிறார்கள். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க தின்னன் போர்க்களத்தில் இறங்குகிறார். காளா முகியை எப்படி அழித்தார்? கடவுளை நம்பாத தின்னன் எப்படி சிவ பக்தர் ஆனார்? இதில் பிரபாஸ் உடைய வேலை என்ன? அர்ஜுனனுக்கும் மோகன்லாலுக்கும் இடையே நடந்த சண்டை என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஸ்ரீகாளாஹஸ்தியில் எழுந்து உள்ள சிவ- கண்ணப்பா பற்றி எல்லோருக்குமே தெரியும். இந்த படத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் நிறைய எதிர்பார்ப்புகள்.
படத்தில் தின்னன் கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். இவரைத் தொடர்ந்து படத்தில் வரும் எல்லா நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
படத்தின் ஆரம்பத்தில் கண்ணப்பாவின் கதை சொல்லுவதில் தொடங்குகிறது. அதற்குபின் அவர் எப்படி சிவ பக்தர் ஆனார் என்பதை சொல்லும் ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
சண்டை, காதல், பக்தி என்ற அனைத்தையுமே இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். முதல் பாதி குடிகள் கதை, காதல் என்று செல்கிறது. இரண்டாம் பதி காளா முகி- தின்னனை எதிர்க்கும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இடைவெளிக்குப் பிறகு மோகன்லால், பிரபாஸ் டைய வரவெல்லாம் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி ஆரம்பத்தில் போர் அடிக்கும் வகையில் சென்றாலும் பிரபாஸின் வருகைக்கு பிறகு காட்சி விறுவிறுப்பாக செல்கிறது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது.
விஷ்ணுவின் காதல் காட்சிகள் எல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது. அந்த காலகட்டத்தில் உடன் ஒப்பிடும்போது கொஞ்சம் ஓவரான ரொமான்ஸ் தான். சிவனைப் பற்றி சொல்லும் காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சொல்லப்போனால் இரண்டாம் பாதிக்குப்பின் ஒரு மணி நேரம்தான் படத்தினுடைய உண்மையான கதை. அந்த அளவிற்கு உணர்ச்சிபூர்வமான பக்தி காட்சிகள் இருக்கிறது.
படத்தினுடைய பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தையுமே சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அனைவரும் கண்டும் மகிழும் படமாக இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் தேர்வு
நடிகர்களுடைய நடிப்பு
கதைக்களம் சிறப்பு
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு எடிட்டிங் அருமை
பக்தி காட்சிகள் நன்றாக இருக்கிறது
குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
காதல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் கண்ணப்பா - பக்தி பரவசம்