கும்கி 2-ஆம் பாகத்தில் இந்த பிரபல நடிகர் ஹீரோவா..? யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.!

0
355
actor-vishnu-vishal
- Advertisement -

2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த படம் “கும்கி”. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனனும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரிலும் வெளியானது.

kumki

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நடிகர் விக்ரம் பிரபுவிற்கும், நடிகை லட்சுமி மேனனுக்கு நல்ல ஒரு அறிமுகபடமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தையும் இயக்குனர் பிரபு சாலமனே இயக்க வுள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்த படத்தில் தமிழில் வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று ஊர்ஜிதமாகவில்லை.

Vishnu_vishal

கும்கி 2 படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கபட்டுள்ள நிலையில் தாய்லாந்தில் இந்த படத்தின் ஓரு சில காட்சிகள் படமாக்க பட்டுள்ளதாம். மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement