அதன் பின்னர் தான் ஜிவாலாவை சந்தித்தேன். நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்.

By Rajkumar · 13/4/2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

https://twitter.com/Guttajwala/status/1243950715522789376

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : வீடியோ காலில் ரம்யா கிருஷ்ணன் கொடுத்த முத்தம். புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுஇருந்தார்.

வெளிப்படையாகச் சொன்னால், என் இதயத்தில் காதலுக்கு இடமில்லை. என்னைப் பொறுத்தவரை, காதல் என்பது திருமணத்தைப் பற்றியது, அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. என்னுடையது ஒரு காதல் திருமணம், நாங்கள் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். அந்த தருணங்களை மறப்பது நிச்சயமாக எளிதல்ல. ஆனால் வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டும் என்று நான் நம்புகிறேன். நான் அதில் வலுவான நம்பிக்கை கொண்டவன். நாட்கள் செல்ல செல்ல, உங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள யாராவது உங்களுக்குத் தேவை. நான் முதல் மனைவியை பிரிந்த பிறகு, நான் ஜ்வாலாவை சந்தித்து அவளுடன் நிறைய நேரம் செலவிட ஆரம்பித்தேன். அவர் மிகவும் நேர்மறையான நபர், அதுதான் நான் அவளைப் பற்றி விரும்பும் காரணம் என்றும் கூறியுள்ளார்.

https://twitter.com/Guttajwala/status/1249235516823756800

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால்,ஜுவாலா கட்டாவினால் நான் என் மனைவியைப் பிரிந்து விட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ராட்சசன் பட நேரத்தில் நான் அமலா பாலோடு இருந்ததாகச் சொல்கின்றனர். அவர்கள் கூறுவது பொய் என நிரூபிக்க என்னுடைய பிரிவின் உண்மையான காரணத்தை என்னால் கூற இயலாது. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் தோழியான ஜுவாலா, விஷ்ணு விஷால் மற்றும் தனுக்கு இருக்கும் உறவு குறித்து பிரபல பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full