வீடியோ காலில் ரம்யா கிருஷ்ணன் கொடுத்த முத்தம். புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.

0
2305
- Advertisement -

கொரோனாவினால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் எண்ணிக்கை தீவிரமாகிக் கொண்டு செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை இன்னும் 15 நாட்களுக்கு நீட்டித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, படங்கள் பார்ப்பது, சமையல் செய்வது என பல வேலைகளை செய்து மக்கள் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Ramya Krishna Comments On Charmy: అంత మాట ...

மேலும், வீட்டில் இருப்பது மக்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக சில பிரபலங்கள் தங்களால் முடிந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான ரம்யா கிருஷ்ணன் மக்களுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதையும் பாருங்க : அஜித்தை கிண்டலடித்த விஜய் ரசிகர், மாஸ்டர் படத்தை பற்றி கிண்டலடித்த திரௌபதி இயக்குனர்.

- Advertisement -

அந்த முத்தம் புகைப்படத்தை தெலுங்கு கவர்ச்சி நடிகை சார்மி கவுர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பது, ஊரடங்கு நேரத்தில் நானும், ரம்யா கிருஷ்ணனும் பலமுறை வீடியோ காலில் பேசி இருக்கிறோம். அவருடைய இந்த முத்தத்திற்கும் வீடியோ காலுக்கும் நான் அடிமை ஆகிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் இந்த புகைப்படம் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

“இதுவே என் கட்டளை, என் கட்டளையே என் சாசனம்” என்ற டயலாக் மூலம் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். தனது 14 வயதிலேயே சினிமா கால் தடம் பதித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் தமிழ், தெங்லுகு, கன்னடம், மலையாளம் என்று பலமொழி படங்களில் நடித்து உள்ளார். பின் தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்தவர் என்று பார்த்தால் நம்ம ரம்யா கிருஷ்ணன் மட்டும் தாங்க. இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் பட்டையை கிளப்புவார்.

இதையும் பாருங்க : பார்ப்பன பிள்ளையின் அந்த தொனி கொஞ்சம் அதிகம் தெரிந்ததால் ஷங்கரின் படத்தை நிராகரித்தேன் – கமலின் ரீ வைண்ட்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் இயக்குனர் கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கப் போகிறார் என்று தெரிய வந்து உள்ளது. “வந்தே மாதரம்” என்ற படத்தின் மூலம் இருவரும் இணைய உள்ளார்கள். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவிகா கோர் மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்கள்.

Advertisement