தனது இரண்டாம் திருமணத்தின் பத்திரிக்கையை வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதுவும் இவ்ளோ சீக்கிரமாவா ?

0
4457
- Advertisement -

தனது இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

-விளம்பரம்-
vishnu

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதையும் பாருங்க : கர்ணன் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த இளைஞருக்கு தர்ம அடி. காரணம் இது தான். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தார்.

ஜுவாலாவின் பிறந்த நாளன்று இருவரும் மோதிரத்தை மாற்றி தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தார் விஷ்ணு விஷால். மேலும், தங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் என்று சொன்ன விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது இரண்டாம் திருமணத்தின் தேதியை திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement