விஷ்ணு விஷுலின் முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் மகளா. அதுவும் அவர் ரஜினியோட உயிர் நண்பர். அதனால் தான் அவர் மகள் பெயர் ரஜினி.

By Rajkumar · 1/6/2021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதையும் பாருங்க : பேர்ல இருந்த ஜாதி பெயர ஜனனி தூக்கிட்டாங்க - இவங்க என்னடானா நாய்க்கு ஜாதி பெயர் வச்சி அதுக்கு பேஜ் வேற வச்சிருக்காங்க.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. பின்னர் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார் விஷ்ணு விஷால். விஷ்னு விஷால் அறிவித்தபடிஅவரது இரண்டாம் திருமணத்தை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்றது.

இரண்டாம் திருமணத்திற்கு பின்னர் கூட AR என்று (அதாவது மகன் Aryan மற்றும் முதல் மனைவி Rajini) டாட்டூ கூட குத்தி இருந்தார் விஷ்ணு விஷால். உண்மையில் விஷ்ணு விஷால் முதல் மனைவி ரஜினி, பிரபல நடிகர் கே என் நட்ராஜின் மகள் தான், இவர் ரஜினியின் மிகவும் நெருங்கிய நண்பர், நடிகராக இருந்த இவர் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் ரோஜா, வேலைக்காரன் போன்ற சீரியல்களில் கூட நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full